×

பிரித்வி ஷாவா? ஹர்பிரீத்தா? இன்று அசத்தப்போவது யாரு?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று இரவு தொடங்கும் 29வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஒவ்வொரு அணியும் முதல், 2வது சுற்றுகளில் தலா 7 ஆட்டங்களில் விளையாட வேண்டும். இது 2து சுற்றின் முதல்(29வது) லீக் ஆட்டம். இந்த 2 அணிகளும் ஏற்கனவே தலா 7 ஆட்டங்களில் விளையாடி விட்டன. அவற்றில் டெல்லி 5 ஆட்டங்களில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 3ஆட்டங்களில் வென்று பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய டெல்லிக்கும், பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள பஞ்சாப்புக்கும் தொடர் வெற்றிகள் அவசியம். கடைசியாக மோதிய ஆட்டங்களிலும் கிடைத்த வெற்றியை தொடர இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* இதுவரை மோதியதில்...
ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேபிடல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 27முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் 15 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. இந்த அணிகள் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 3-2 என்ற கணக்கில் டெல்லி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளும் களம் கண்ட ஆட்டங்களில் அதிகபட்சமாக டெல்லி 231, பஞ்சாப் 202ரன்னும் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பஞ்சாப் 104, டெல்லி 67 ரன்னில் சுருண்டுள்ளன.

* இந்தமுறை மோதியதில்...
நடப்புத் தொடரில் இந்த 2 அணிகளும் ஏற்கனவே ஏப்.18ம் தேதி 11வது லீக் ஆட்டத்தில் மோதியுள்ளன. அதில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது.

Tags : Prithvi Shaw ,Harpreet , Prithvi Shaw? Harpreet? Who is going crazy today?
× RELATED டெல்லியில் நள்ளிரவில் அமேசான்...